உந்துகுழாய் இணைக்கும் பணிகள், மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது

சென்னை: ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் பெண் காவலர் அழகிய குரலில், மெல்லிய நடையிலும் போதைப் பொருளுக்கு எதிராக தானே எழுதி பாடிய பாடல் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆவடி காவல் ஆணையரகம் பட்டாபிராம் காவல் சரகத்துக்குட்பட்ட முத்தாப்புதுப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் சசிகலா என்கிற பெண் காவலர் போதைப் பொருள்களுக்கு எதிராக தான் எழுதிய பாடல் ஒன்றை அழகாக பாடி, அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பெண் காவலர் சசிகலா போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் கூறி வருகின்றனர்.

பாடலின் ஒரு சில வரிகள்: உனக்கும் வேணா எனக்கும் வேணாம் போதை தானுங்க… ஒன்னா சேர்ந்து ஓரம் கட்ட சேர்ந்து பாடுங்க.. போதையில்லா மேடையிலே நடனம் ஆடுங்க.. வாழ்க்கை ஒரு வீணையப்பா பார்த்து வாசிங்க.. கஞ்சாவத்தான் நஞ்சாகத்தான் எண்ணிப்பாருங்க… கஞ்சா போதையைத்தான் கைவிடனும் தம்பி.. குடும்பம் இருக்குதுப்பா உங்களைத்தான் நம்பி.. போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க.. இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்க. என்று பெண் காவலர் சசிகலா தனது அழகிய குரலால், மெல்லிய நடையில் பாடிய பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

The post உந்துகுழாய் இணைக்கும் பணிகள், மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது appeared first on Dinakaran.

Related Stories: