10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

 

கரூர்,பிப்.16: 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாரதிதாசன் வரவேற்றார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மணிகண்டன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் யோகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்துள்ள சரண் விடுப்பு உட்பட பணப்பலன்களை மீண்டும் வழங்கிட வேண்டும்.

2009ம் ஆண்டு ஜூன் 1ம்தேதி முதல் பணியேற்று 7வது ஊதியக்குழு மூலம் மிகக் குறைவாக ஊதியம் பெறும் இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய குறைபாட்டினை களைய வேண்டும். அரசாணை 243ஐ திரும்ப பெற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: