திருவள்ளூர் எறையூரில் இஸ்லாமிய மாநாடு

திருவள்ளூர்: இஸ்லாத்தின் மீது அதிக பற்றுகொண்ட தொழுகையை முழுமையாக கடைபிடிக்கக்கூடிய இஸ்லாமியர்கள் அந்தந்த பகுதி மசூதிகளிலிருந்து குழுக்களாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று இஸ்லாத் குறித்து விழிப்புணர்வு இல்லாத இஸ்லாமியர்களை மசூதிக்கு அழைத்து தொழுகை நடத்துவார்கள். குழுக்களுக்கு தப்லீக் ஜமாத் எனும் பெயரும் உள்ளது. பல ஊர்களுக்கு செல்லும் தப்லீக் ஜமாத்தினர் 3 மாவட்டங்களுக்கு ஒரு இடத்தில் ஒன்று கூடி இஸ்லாத் குறித்த அறிவு மற்றும் குர்ஆன் விளக்கவுரையை மாநிலங்களில் பல பகுதியிலிருந்து வந்த அறிஞர்கள் விளக்கி கூறுவார்கள்.

மேலும் இஸ்லாத்தின் கடமைகள், வழிமுறைகள், நடைமுறைகள் குறித்தும் விளக்கி கூறப்படும். இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த எறையூர் கிராமத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த தப்லீக் ஜமாத் குழுவினருக்கு இஸ்திமா என்னும் இஸ்லாமிய மாநாடு உலக நன்மைக்காகவும், அனைவரும் நலம்பெற வேண்டியும் நடைபெற்றது. இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இஸ்லாத்தின் கொள்கை விளக்கஉரைகள், வழிமுறைகள் அனைத்தையும் கற்று பயன்பெற்றனர். பின்னர் சிறப்பு பிரார்த்தனையுடன் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த இஸ்திமா என்னும் மாநாடு முடிவுற்றது.

 

The post திருவள்ளூர் எறையூரில் இஸ்லாமிய மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: