உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் அதிரடி மாற்றம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை உதயகுமாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவரின் இருக்கையை உதயகுமாருக்கு வழங்கக் கோரி அதிமுக தரப்பில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு 4 முறை கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. நேற்றைய கேள்வி நேரத்துக்கு பிறகு ஓபிஎஸ்ஸின் இருக்கை மாற்றக் கோரி எடப்பாடி பழனிசாமி பேரவையிலேயே கோரிக்கை வைத்தார். இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி முதலமைச்சர் சபாநாயகரிடம் கேட்டிருந்தார்.

முதலமைச்சர் கோரிக்கையை அடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக சபாநாயகர் மறுபரிசீலனை செய்து முடிவு எடுத்துள்ளார். சபாநாயகர் உத்தரவை அடுத்து சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையில் மாற்றம் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகில் ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த ஓ.பி.எஸ்., 206-ம் எண் இருக்கையில் இருந்து 207-ம் எண் இருக்கைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் இருக்கையும் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் சட்டப்பேரவையில் செந்தில்பாலாஜியின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் 2-வது வரிசையில் இருந்த கே.பி.அன்பழகன் முன் வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது.

The post உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் அதிரடி மாற்றம்! appeared first on Dinakaran.

Related Stories: