2-வது நாளாக டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்: விவசாயிகளை தடுக்க 5 அடுக்கு தடுப்புகள்; தலைநகரில் பரபரப்பு!

டெல்லி: விவசாயிகள் தலைநகரை முற்றுகையிடுவதை தடுக்கும் வகையில் டெல்லி எல்லைகளில் போலீசாரும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் நடத்தும் விவசாயிகளை தடுக்க டெல்லியில் 5 அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் ஆணிகளை பதித்தும், கம்பி வேலிகளை அமைத்தும் விவசாயிகளை தடுக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆணி, கம்பி வேலிகளை தாண்டி வரும் விவசாயிகளை தடுக்க கான்கிரீட் தடுப்புகள் அமைக்கபப்ட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது. டெல்லி திக்ரி எல்லையில் இரவு, பகலாக கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. சாலையில் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புகளை விவசாயிகள் இழுத்துச் சென்றதால் சிமெண்ட் மூலம் தடுப்புச் சுவர் அமைக்கபப்ட்டுள்ளது. சாலைகளில் கான்கிரீட் தடுப்புகளை சிமெண்ட் மூலம் இணைத்து தடுப்புச் சுவரை போலீசார் எழுப்பி வருகின்றனர்.

நேற்று அரியானா எல்லையில் தடுக்கப்பட்ட விவசாயிகள், இன்று தலைநகர் நோக்கி டிராக்டர் ஊர்வலத்தை தொடர திட்டமிட்டுள்ளனர். 2020-ல் நடைபெற்ற தொடர் போராட்டத்தின்போது ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதியையே நிறைவேற்றவில்லை. விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post 2-வது நாளாக டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்: விவசாயிகளை தடுக்க 5 அடுக்கு தடுப்புகள்; தலைநகரில் பரபரப்பு! appeared first on Dinakaran.

Related Stories: