ஆர்.கே.பேட்டை அருகே அரசுப் பள்ளிக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம்

பள்ளிப்பட்டு: அரசுப் பள்ளி மாணவியர் வசதிக்காக நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே பாலபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர் வசதிக்காக ஆல் தி சில்ரன் மற்றும் ஒயிட் ஆரா டிரஸ்ட் சார்பில், நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆல் தி சில்ரன் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஜினி, பாலாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உதயன் ஆகியோர் பங்கேற்று பள்ளி தலைமையாசிரியை பாக்கியலட்சுமியிடம் நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வழங்கினார்.

மேலும் பள்ளி மாணவியர் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்திய நாப்கின்களை கழிப்பிடங்களில் போடுவதாலும், முறையாக அப்புறப்படுத்த இயலாமல் இருப்பதாலும் சுற்று சுழல் பாதிக்கப்படுகிறது. நாப்கின் ஏரியூட்டும் இயந்திரம் மூலம் இதனை வெளியில் போடாமல் எரிக்க முடியும் என்றும் மாணவிகள் முறையாக பயன்படுத்திக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுகாதார ஆய்வாளர் பாலன், கிராம சுகாதார செவிலியர் மோகன சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே அரசுப் பள்ளிக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம் appeared first on Dinakaran.

Related Stories: