மல்லாங்கிணறில் இருந்து பெரியார் பஸ் நிலையத்திற்கு புதிய வழித்தட பேருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்

 

காரியாபட்டி, பிப். 12: விருதுநகர் அருகே, மல்லாங்கிணறில் மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேருந்து சேவையை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ”மல்லாங்கிணறு பேரூராட்சியை சுற்றி ஏராளமான கிராமங்கள் இருப்பதோடு தற்போது வளர்ந்து வரும் பேரூராட்சி யாக இருந்து வருகிறது. மல்லாங்கிணறிலிருந்து மதுரைக்கு டவுன் பேருந்து வசதி வேண்டும் என்று மக்கள் நீண்ட கால மாக கோரிக்கை விடுத்து வந்தார்கள்.

மக்களின் கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய பஸ் வழித்தடத்திற்கு ஏற்பாடு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் மல்லாங்கிணறு பேரூராட்சி வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும். இதுவரை ரூ.26 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.

நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் ஆறுமுகம், பொது மேலாளர்கள் ராகவன், துரைச்சாமி, வர்த்தக மேலாளர் நடராஜன், கிளை மேலாளர் ராஜ் மோகன், பேருராட்சி தலைவர் துளசிதாஸ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ், காரியாபட்டி ஒன்றிய செயலாளர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் அரசகுளம் சேகர், நகர செயலாளர் முருகேசன், துணை செயலாளர் கோச்சடை, வழக்கறிஞர் பாலச்சந்திரன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

The post மல்லாங்கிணறில் இருந்து பெரியார் பஸ் நிலையத்திற்கு புதிய வழித்தட பேருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: