இந்தியாவின் டிஎன்ஏவில் இருக்கிறது அன்பு: ராகுல் காந்தி பேச்சு

ராய்கர்: இந்தியாவின் ரத்தத்தில் அன்பு ஓடுகிறது. ஆனால் பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் வெறுப்பை பரப்புகின்றன என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணம் தற்போது சட்டீஸ்கரில் நடந்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக ராய்கரில் யாத்திரை சென்ற ராகுல் காந்தி பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது, “இந்தியாவின் டிஎன்ஏவில் அன்பு ஓடுகிறது. பல்வேறு மதங்கள், இனங்களை சேர்ந்தவர்கள் அமைதியாக, அன்புடன் வாழ்கின்றனர். ஆனால் தற்போது பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வெறுப்பையும், வன்முறையையும் பரப்பி வருகின்றன. மொழி, சாதி, மாநிலங்கள் ரீதியாக இந்த வெறுப்பு பரவி வருகிறது. இது நாட்டை பலவீனப்படுத்தும்.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூர் வன்முறையால் பற்றி எரிந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி ஒருமுறை கூட அங்கு செல்லவில்லை. நாட்டில் பல லட்சம் இளைஞர்களின் ராணுவ பணி கனவை அக்னி வீரர் திட்டம் சிதைத்து விட்டது. அனைத்து பாதுகாப்பு ஒப்பந்தங்களும் தொழிலதிபர் அதானிக்கு செல்வதை நான் நாடாளுமன்றத்தில் சொன்னதற்காக என் உறுப்பினர் பதவியை ரத்து செய்து, அரசாங்க வீட்டை காலி செய்ய வைத்தார்கள். ஆனால் மக்களின் இதயங்களில் வாழும் எனக்கு அரசாங்க வீடு தேவையில்லை. எதிர்கால சந்ததியினருக்காக வெறுப்பும், வன்முறையும் இல்லாத இந்தியாவை காங்கிரஸ் விரும்புகிறது” என்று இவ்வாறு பேசினார்.

 

The post இந்தியாவின் டிஎன்ஏவில் இருக்கிறது அன்பு: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: