தீண்டாமை, மது ஒழிப்பு வாசகங்களுடன் சமூக நல்லிணக்க பேரணி

 

திருவாரூர், பிப். 10: திருவாரூர் மாவட்ட போலீஸ் துறை சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பேரணியை எஸ்.பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட போலீஸ் துறையில் இயங்கி வரும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் சமூக நல்லிணக்க பேரணி நேற்று நடைபெற்றது. புதிய ரயில் நிலையத்திலிருந்து எஸ்.பி ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்டத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதற்கும், மதுபோதைகளை ஒழிப்பதற்கும் பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

புதிய ரயில் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியானது பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை, தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை அடைந்து முடிவுற்றது. இதில் திருவாரூர் டவுன் டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர் மோகன், புள்ளியியல் பிரிவு ஆய்வாளர் சரவணபாண்டியன் மற்றும் மனித உரிமை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், ஐயப்பன், முருகேசன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தீண்டாமை ஒழிப்பது, மது போதைகளை ஒழிப்பது உள்ளிட்ட வாசகங்களுடன் பேரணியானது நடைபெற்றது குறிப்பிடதக்கது.

The post தீண்டாமை, மது ஒழிப்பு வாசகங்களுடன் சமூக நல்லிணக்க பேரணி appeared first on Dinakaran.

Related Stories: