அகில இந்திய தொழிற் துணை தேர்வு தேர்வு கட்டணம் செலுத்த வரும் 15ம்தேதி கடைசி நாள்: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: அகில இந்திய தொழிற் துணை தேர்வுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்த வரும் 15ம் தேதி கடைசி நாள் என்று சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அகில இந்திய தொழிற்தேர்வு (துணைத்தேர்வு)-மார்ச் 2024ல் நடக்கிறது. இதனால் 2017ல் இரண்டாண்டு தொழிற்பிரிவில் சேர்ந்து, தேர்வில் கலந்துகொள்ள இயலாத மற்றும் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு மட்டும் அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு டெல்லி தலைமை இயக்குநரால் (பயிற்சி) அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு எழுதவுள்ள பயிற்சியாளர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி வரும் 15ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வில் கலந்துகொள்ள விரும்புவோர் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகி தேர்வு தொடர்பான விவரங்களை அறிந்து பயன்பெறலாம். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், எண்,55, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, வண்ணாரப்பேட்டை, சென்னை-600021. தொலைபேசி எண். 044-25209268 என்ற முகவரியில் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அகில இந்திய தொழிற் துணை தேர்வு தேர்வு கட்டணம் செலுத்த வரும் 15ம்தேதி கடைசி நாள்: சென்னை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: