ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

 

கரூர், பிப். 9: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, திமுக மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ்பாபு, மாநகர செயலாளர்கள் கனகராஜ், சுப்பிரமணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர செயலாளர் இளங்கோவன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் குமாரசாமி உட்பட அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநில அரசுகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள மசோதாக்களுக்கு அந்தந்த மாநில கவர்னர் மூலம் ஒப்புதல் வழங்காமல் மாநில அரசின் உரிமைகளை பறிக்க கூடிய மாநில வளர்ச்சிக்கு எதிராக செயல்படக்கூடிய ஒன்றிய அரசின் போக்கை கண்டித்தும், மாநில வளர்ச்சிக்கு கடன்பெற தடை விதிக்கின்ற போக்கை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: