ரூ.8.16 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் தொகுதியில் குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகள் தொடக்கம்

சென்னை: ரூ.8.16 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் தொகுதி, பெரும்பாக்கம் வடக்கு, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிக்கு பிரத்யேக நெகிழுரும்பு குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.8.16 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் தொகுதி, பெரும்பாக்கம் வடக்கு, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிக்கு பிரத்யேக நெகிழுரும்பு குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகளுக்கு 05.02.2024 அன்று அமைச்சர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

அதனடிப்படையில், 400 மி.மீ விட்டமுடைய பிரத்யேக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் 3.4 கி.மீ நீளத்திற்கு பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து பெரும்பாக்கம் வடக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வரை 06.02.2024 அன்று தொடங்கப்பட்டது.

இத்திட்டப் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட்டு 24,152 குடியிருப்புகளில் உள்ள 1,00,000 மக்களுக்கு நாளொன்றுக்கு 16.5 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.

The post ரூ.8.16 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் தொகுதியில் குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: