80 வயது ரிடையர்டு ஆனவர்கள்தான் பாஜவுக்கு போய் இருக்காங்க… எஸ்.பி.வேலுமணி தெம்பு

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் சிலர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளதாக தகவல் வௌிவந்துள்ளது. இதுபற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் பாரதிய ஜனதாவுக்கு போக மாட்டார்கள். வயதானவர்கள், 80 வயதுக்கு மேல் உள்ள ரிடையர்டு ஆனவர்கள்தான் பாரதிய ஜனதாவுக்கு செல்வார்கள். தமிழகத்தில் அதிமுக வலுவான கட்சியாக வலம் வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்’ என்றார்.

ஓசூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பத்தாயிரம் தொண்டர்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைகின்றனர். அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜவில் இணைந்திருக்கிறார்கள் என்றால், அநேகமாக அவர்கள் கட்சியில் செயல்படாதவர்களாக தான் இருக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான், தமிழகத்தில் மெகா கூட்டணி அமையும். அதிமுக தான், தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி. தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துள்ளது. 2 கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கத்தின் தலைமையில் தான் கூட்டணி. அதிமுக தலைமையில், கூட்டணிக்கு வரும் கட்சிகளை சேர்த்துக்கொள்வோம்,’என்றார்.

The post 80 வயது ரிடையர்டு ஆனவர்கள்தான் பாஜவுக்கு போய் இருக்காங்க… எஸ்.பி.வேலுமணி தெம்பு appeared first on Dinakaran.

Related Stories: