கோவை உக்கடம் குடியிருப்பை அலங்கரிக்கும் ஓவியங்கள்: ஸ்பெயின், சிங்கப்பூர் ஓவியர்களின் முயற்சிக்கு குவியும் பாராட்டு

கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வரைய பட்டுள்ள ஓவியங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை காந்திபுரம் மேம்பாலத்தின் கீழ் உள்ள தூண்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை கதைகள் வரையப்பட்டன. அதே போல ஸ்ட்ரீட் ஆர்ட் அமைப்பினர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சாதாரண மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் அவர்களின் வாழ்வியலை மையப்படுத்தி தத்துரூபமாக ஓவியங்கள் வரைத்து வருகிறார்கள்.

அதன்படி சிங்கப்பூர், ஸ்பெயின் நாடுகளிலிருந்து வந்த ஓவியர்கள் இந்திய ஓவியர்களுடன் இணைந்து உக்கடத்திலுள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பில் கோவை மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் ஓவியங்களை வரைந்தனர். வாழை இலையில் பரிமாறப்படும் உணவு, தேனீர் கடை, பானிபூரி விற்பவர், ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்கள் என தங்கள் வாழ்வோடு தொடர்புடைய ஓவியங்கள் சுவர்களில் வரையப்பட்டிருப்பதை அந்த பகுதியினர் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

The post கோவை உக்கடம் குடியிருப்பை அலங்கரிக்கும் ஓவியங்கள்: ஸ்பெயின், சிங்கப்பூர் ஓவியர்களின் முயற்சிக்கு குவியும் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: