திருப்பூர், பிப். 7: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் வருகிற 10ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து வட்டங்களிலும் நடைபெறுகிறது. இந்த குறைதீர்ப்பு முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கு இருக்கிறார்கள்.
அதன்படி, அவினாசி நம்பியாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், குண்டடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், வடசின்னாரிபாளையம் கிராமத்திற்கு கடலைக்காட்டுப்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், கொமரலிங்கம் கூட்டுறவு கடன் சங்கத்திலும், புளியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், கணக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், ஆண்டிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், இராவணாபுரம் கூட்டுறவு கடன் சங்கத்திலும், மொரட்டுப்பாளையம் கூட்டுறவு கடன் சங்கத்திலும் நடைபெறுகிறது.
இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம், புதிய அட்டை நகல் கோரும் மனுக்களை பதிவு செய்தல் போன்ற மின்னணு குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திருப்பூர் மாவட்டத்தில் பிப்.10ல் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.