குப்பை கொட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர், டிச. 5: திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பாறைகுழிகளில் கொட்டப்பட்டு வந்தது. இதனிடையே பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இதற்கு நிரந்தர தீர்வுகாண பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான 7.20 ஏக்கர் இடம் இடுவாய் அருகே சின்னகாளிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் குப்பை கொட்டுவதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இங்கும் குப்பை கொட்டுவதற்கு இடுவாய் ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து சின்னக்காளிபாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: