திண்டுக்கல்லில் ஒன்றிய அரசைக் கண்டித்து தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்: புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

 

திண்டுக்கல் பிப் 7: ஒன்றிய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல்லில் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தை கொண்டுவந்த ஒன்றிய அரசை கண்டித்தும், அந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ சங்க நிர்வாகி பிச்சமுத்து தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் தனசாமி, பால்ராஜ், பாண்டியன், பிரபாகரன் முன்னிலை வகித்தனர். அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ராமநாதன் வாழ்த்திப்பேசினார்.

ஓட்டுனர்களை கொலை குற்றவாளிகளாக இயற்றப்பட்ட சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும், ஆயுள் வாகனவரிகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

The post திண்டுக்கல்லில் ஒன்றிய அரசைக் கண்டித்து தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்: புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: