மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் மே 10க்குள் வெளியேறும்: நாடாளுமன்றத்தில் அதிபர் முய்சு தகவல்

மாலே: மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவம் மே 10ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறும் என அதிபர் முகமது முய்சு தெரிவித்தார். மாலத்தீவு நாடு நீ்ண்ட காலமாக இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் சீனாவுடன் மிக நெருக்கமானவரான முகமது முய்சு வெற்றி பெற்றார்.அவர் வெற்றி பெற்றதும், மாலத்தீவில் உள்ள 88 இந்திய ராணுவத்தினரை வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து இரு நாட்டின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

கடந்த மாதம், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தின் போது, ​​ மோடிக்கு எதிராக,மாலத்தீவின் அமைச்சர்கள், இழிவான கருத்துக்களை தெரிவித்ததால், இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய முய்சு,‘‘மாலத்தீவில் இருந்து வெளிநாட்டு படைகளை திரும்பப் பெறுவோம் என்று தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இந்திய ராணுவத்தின் முதல் குழு மார்ச் 10-ம் தேதிக்கு முன் வெளியேறும். இந்திய படைகளின் எஞ்சிய குழுக்கள் மே 10 ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறும். மாலத்தீவு மக்களின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பேன்’’ என்றார்.

 

The post மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் மே 10க்குள் வெளியேறும்: நாடாளுமன்றத்தில் அதிபர் முய்சு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: