சென்னை M.C. சாலை – சிமெட்ரி சாலை சந்திப்பு பகுதியில் முழுவதும் பாதசாரிகள் நடைபாதை அமைக்கும் பணி தொடங்குவதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை மாநகராட்சி பாதசாரிகளின் வசதிக்காக M.C. சாலையினை சிமெட்ரி சாலை சந்திப்பிலிருந்து G.A. சாலை சந்திப்பு வரை சாலை முழுவதும் பாதசாரிகள் நடைபாதை அமைக்கும் பணியினை 07-02-2024 அன்று முதல் தொடங்கபட உள்ளது.

எனவே பெருநகர சென்னை போக்குவரத்து காவல் சார்பாக கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளது

* ஸ்டான்லி சுரங்கப்பாதையிலிருந்து M.C.சாலையினை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் திருவெற்றியூர் நெடுஞ்சாலை அல்லது மன்னார்சாமி கோவில் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

*கும்மாளம்மன் கோவில் சாலை மற்றும் G.A. சாலையிலிருந்து M.C.சாலையினை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் மேற்கு கல்மண்டபம் சாலை மற்றும் மன்னார்சாமி கோவில் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

மேற்படி போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் தங்களது ஒத்துழைப்பினை வழங்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை M.C. சாலை – சிமெட்ரி சாலை சந்திப்பு பகுதியில் முழுவதும் பாதசாரிகள் நடைபாதை அமைக்கும் பணி தொடங்குவதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: