சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை..!!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகியுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. 24ம் தேதி தொடங்கிய ஆலோசனை கூட்டம் நேற்றுவரை 36 நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சந்தித்துள்ளது.

இன்று நிறைவு நாள் ஆலோசனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆலோசனையில் கரூர், திண்டுக்கல் நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இன்று மாலை காஞ்சிபுரம், மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தற்போது நடைபெற்று வரும் கரூர், திண்டுக்கல் ஆலோசனை கூட்டம் பொறுத்தவரையில் இரு நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுமே தங்களுடைய கருத்துக்களை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் தெரிவித்தனர்.

திண்டுக்கல் பொறுத்தவரையில் வேலுசாமி எம்.பி ஆக இருந்து வருகிறார். இந்நிலையில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வேலுசாமிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுமா அல்லது புதிதாக யாருக்காவது வாய்ப்பு கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருக்க கூடிய சூழலில் தொகுதி நிர்வாகிகளின் கருத்துகளை கேட்ட பிறகு அந்த கருத்தை தலைமைக்கு கொண்டு சென்று முடிவெடுப்பதற்கு திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு முடிவெடுத்துள்ளது. கரூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்த வரையில் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இருந்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் கரூர் தொகுதி நிர்வாகிகளிடம் கருத்துகளை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கேட்டு வருகிறது. கரூர் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்துள்ளது. அத்தகைய விருப்பத்தை தேர்தல் குழுவிடம் தெரிவிக்கவுள்ளனர். வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணி உள்ளிட்ட ஒரு விரிவான ஆலோசனை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: