உலக புற்றுநோய் தினத்தையொட்டி தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம்

 

தஞ்சாவூர், பிப்.5: உலக புற்றுநோய் தினத்தையொட்டி இந்திய மருத்துவ கழக தஞ்சாவூர் கிளை, இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க தமிழ்நாடு கிளை, விஷ்ணு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் பேரணி நேற்று தஞ்சாவூரில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் இளங்கோவன் தலைமை வகித்தார். விழிப்புணர்வு பேரணியை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வாயிலில் இருந்து புறப்பட்டு அண்ணாசிலை, காந்திஜி சாலை, இர்வின் பாலம், மாநகராட்சி அலுவலகம் வழியாக தஞ்சாவூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

முன்னதாக மருத்துவமனை வாயிலில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இந்திய மருத்துவ சங்க தஞ்சாவூர் கிளை தலைவர் ரவீந்திரன், செயலாளர் சரவணவேல், பொருளாளர் மேத்யூ, இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க மாநில செயலாளர் டாக்டர் மாரிமுத்து, பொருளாளர் கார்த்திகேயன், தஞ்சை மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர்கள் சங்கர நாராயணன், அம்புஜம், டாக்டர் சரஸ்வதி சிங்காரவேலு, விஷ்ணு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சங்கீதா மாரிமுத்து மற்றும் டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் புற்று நோய் பாதிப்புகள் குறித்து புத்தகங்களும் வினியோகிக்கப்பட்டன.

The post உலக புற்றுநோய் தினத்தையொட்டி தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: