அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரநாராயண சுவாமி கோயிலில் பொது விருந்து

 

சங்கரன்கோவில்,பிப்.5: அண்ணா 55வது நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் இணை ஆணையர் அன்புமணி தலைமை வகித்தார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், சங்கரநாராயண சுவாமி கோயில் துணை ஆணையர் வெங்கடேசன், திமுக நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொது விருந்தில் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதையடுத்து அறநிலையத்துறை சார்பில் பெண்களுக்கு சேலைகளும், ஆண்களுக்கு வேஷ்டிகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் யூனியன் துணை சேர்மன் செல்வி, திமுக நகரச் செயலாளர் பிரகாஷ், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் உதயகுமார், விவசாய அணி துணை அமைப்பாளர்கள் கருப்பசாமி முருகராஜ், வீரிருப்பு பஞ்சாயத்து தலைவர் சண்முகராஜ், ஜெயா, ஜெயக்குமார், செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விகேபுரம்: இதேபோல் பாபநாசம் உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடந்த பொது விருந்தை நகராட்சி சேர்மன் செல்வ சுரேஷ் பெருமாள் துவக்கிவைத்தார். இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் வார்டு கவுன்சிலர் விக்னேஷ் திமுகவைச் சார்ந்த ஜெயராமன் ராஜேந்திரன் மற்றும் கோயில் மணியம் செந்தில் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் செய்திருந்தார்.

The post அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரநாராயண சுவாமி கோயிலில் பொது விருந்து appeared first on Dinakaran.

Related Stories: