பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை 1,249 பேர் எழுதினர்

 

நாமக்கல், பிப்.5: நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வில் 1,249பேர் தேர்வு எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 50 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய பயிற்றுனர்கள் பணிக்கான போட்டித்தேர்வு நேற்று நடந்தது. நாமக்கல் கலெக்டர் உமா, பல்வேறு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 368 பேரும், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 396 பேரும், நாமக்கல் வடக்கு நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 273 பேரும், நாமக்கல் ஜெய்விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் 262பேரும் என மொத்தம் 1299 பேர் தேர்வு எழுத ஹால் டிக்ெகட் பெற்றிருந்தனர்.

நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், பார்வை குறைபாடு உள்ள 5 விண்ணப்பதாரர்களுக்கு, உதவியாளர் நியமனம் செய்யப்பட்டு அவர் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 354 பேர் தேர்வு எழுதினர். 14 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 373 பேர் தேர்வு எழுதினர். 23 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. நாமக்கல் வடக்கு நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 263 பேர் தேர்வு எழுதினர். 10 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. அதே போல், நாமக்கல் ஜெய்விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 159பேர் தேர்வு எழுதினர். 3பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. நாமக்கல்லில் உள்ள 4 மையங்களிலும் மொத்தம் 1249 பேர் தேர்வு எழுதினர்.

The post பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை 1,249 பேர் எழுதினர் appeared first on Dinakaran.

Related Stories: