‘கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் எம்பி சீட் கொடுக்க கூடாது’

சிவகங்கை: சிவகங்கை தனியார் மண்டபத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அக்கட்சியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘பிரதமர் பதவிக்கு மோடி தகுதியானவர் என எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கொண்டு, கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அவர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட தற்போதைய எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் சீட் தரக்கூடாது. இவ்வாறு தெரிவித்தார்.

 

The post ‘கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் எம்பி சீட் கொடுக்க கூடாது’ appeared first on Dinakaran.

Related Stories: