சென்னை அண்ணா நினைவிடம் அருகே சசிகலா உடன் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சந்திப்பு..!!

சென்னை: சென்னை அண்ணா நினைவிடம் அருகே சசிகலா உடன் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சந்திப்பு நடைபெற்றது. சென்னை மெரினாவில் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்தபோது இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர். அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு வெளியில் செல்லும்போது, சசிகலா வாகனம் எதிரே வந்தபோது காரில் இருந்து இறங்கிய ஓ.பன்னீர்செல்வம், அவரிடம் சென்று பேசினார். கடந்த டிச.5ம் தேதி ஜெயலலிதா நினைவு நாளில் இருவரும் ஒரே நேரத்தில் வந்த போதும் சந்திக்கவில்லை.

தமிழக மக்கள் எங்கள் பக்கம்:

மக்களை நம்பி இருப்பவர்கள்…தமிழக மக்கள் எங்கள் பக்கம் தான் என்று சசிகலா தெரிவித்துள்ளார். அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தான் என சசிகலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விஜய் கட்சி தொடங்கியதற்கு சசிகலா வரவேற்பு:

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என கட்சி தொடங்கிய விஜய்க்கு சசிகலா வரவேற்பு தெரிவித்தார்.

The post சென்னை அண்ணா நினைவிடம் அருகே சசிகலா உடன் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: