திருவாரூரில் மோசடி புகாரில் சஸ்பெண்ட் ஆன திருவிக கல்லூரி முதல்வர் கீதா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

திருவாரூர்: திருவிக அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கீதா பிப்.1 ம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியில் செயல்பட்டு வருகிறது திரு.வி.க அரசு கலைக்கல்லூரி‌. இக்கல்லூரியின் முதல்வராக 2018-ம் ஆண்டு முதல் கோ.கீதா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு, அந்தப் பதவியையும் கீதா வகித்து வந்தார்.

இந்த நிலையில் கீதா மீது, கல்லூரி கல்வி இயக்குநர் பதவிக்கு வர 5 கோடி பணம் கொடுத்ததாகவும், அந்தப் பணத்தை முறைகேடாகப் பேராசிரியர்களை நியமனம் செய்து பெற்றதாகவும் கீதா மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின மாணவர்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்தது வந்தன.

இந்நிலையில் அவர் அரசு ஆவணங்களை கிழித்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கீதா மீது புகார் எழுந்ததுள்ளன. தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் தனராஜன் திருவாரூர் எஸ்.பி ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவாரூர் தாலுகா போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருவாரூரில் மோசடி புகாரில் சஸ்பெண்ட் ஆன திருவிக கல்லூரி முதல்வர் கீதா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: