கூட்டுறவு அமைப்பு மூலம் கிலோ ரூ.29க்கு பாரத் அரிசி: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் முக்கிய உணவு பொருளான அரிசி விலை நாடு முழுவதும் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு(நாபெட்), தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் பாரத் அரிசி விற்க முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய உணவு துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா நேற்று கூறுகையில்,‘‘ அரிசி விலையைக் கட்டுப்படுத்த, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு ஆகிய 2 கூட்டுறவுகள் மூலம் சில்லறை சந்தையில் பாரத் அரிசி கிலோ ரூ.29 க்கு விற்கப்படும். 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் அடுத்த வாரம் முதல் இந்த அரிசி விற்கப்படும்’’ என்றார்.

The post கூட்டுறவு அமைப்பு மூலம் கிலோ ரூ.29க்கு பாரத் அரிசி: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: