குடிநீர் நிலையம், சிமென்ட் சாலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், எம்எல்ஏவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக ரூ.51.5 லட்சத்தில் 900 மீட்டர் தொலைவுக்கு சிமென்ட் சாலை பணி மற்றும் தெள்ளியமேடு பகுதியில் ரூ.9.5 லட்சம் மதிப்பில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. இப்பணிகள் நிறைவு பெற்று கடந்த சில மாதங்களுக்கு மேலாகியும், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏவிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டு, அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தினர்.

இந்நிலையில், வெங்கடாபுரம் ஊராட்சியில் நேற்று ரூ.51.5 லட்சம் மதிப்பில் புதிய சிமென்ட் சாலை மற்றும் ரூ.9.5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறப்புவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ பங்கேற்று, ரூ.60 லட்சம் மதிப்பிலான சாலை மற்றும் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் ஆப்பூர் சந்தானம், வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி, துணை தலைவர் செந்தில்குமார், தர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குடிநீர் நிலையம், சிமென்ட் சாலை எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: