மக்கள் ஒற்றுமையை பாதிக்கும் தீர்ப்பை கோர்ட் மறுபரிசீலனை செய்ய பாலகிருஷ்ணன் கோரிக்கை

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், பழனி முருகன் கோயிலுக்குள் இதர மதத்தினரை அனுமதிக்கக் கூடாது என்று ஒரு அரசியல் கட்சி பிரமுகர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி மதி, தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து கோயில்கள் அனைத்திற்கும் பொருந்துமாறு ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பு இறை நம்பிக்கையுள்ளவர்களை காயப்படுத்தும். தமிழகத்தில் இந்து கோயில்களில் வரலாற்று காலம் தொட்டு அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் செல்வதற்கு நடைமுறை உள்ளது. பிற மதங்களை சார்ந்த ஆலயங்களில் அனைத்து மதத்தினரும் சென்று வழிபடுவது காலம் காலமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த கட்டுப்பாடு மக்கள் ஒற்றுமையை பெரிதும் பாதிக்க கூடியதாக அமைந்து விடும். எனவே, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மக்களிடம் பகைமை உணர்வை விதைக்கும் இந்த தீர்ப்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அரசியல் நோக்கத்திற்காக தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் தன்னை அறியாமல் நீதிமன்றமும் துணை போயிருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்.

The post மக்கள் ஒற்றுமையை பாதிக்கும் தீர்ப்பை கோர்ட் மறுபரிசீலனை செய்ய பாலகிருஷ்ணன் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: