கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட மாட்டாது கிளாம்பாக்கம், மாதவரத்திலிருந்து இன்று முதல் அரசு பேருந்துகள் இயங்கும்

 

விழுப்புரம், ஜன. 30: விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கோயம்பேட்டிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் (30ம் தேதி) கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும்.

இதன் அடிப்படையில் விழுப்புரம் மண்டலத்திலிருந்து சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, செஞ்சி, புதுச்சேரி மற்றும் திண்டிவனம் ஊர்களிலிருந்து நேற்று இரவு 12 மணிக்கு மேல் சென்னைக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் இனி தாம்பரம் வரை இயக்கப்பட்டு, பின்னர் தாம்பரத்திலிருந்து கிளாம்பாக்கம் சென்றடைந்து பிறகு அந்தந்த ஊர்களுக்கு கிளாம்பாக்கத்திலிருந்து செல்லும்.

மாதவரம் புறநகர் பேருந்து முனையம் வரை இயக்கப்படும் பேருந்துகள் மதுரவாயல் சுங்கச்சாவடி, அம்பத்தூர் எஸ்டேட் வழியாக மாதவரத்துக்கு இயக்கப்படும். மேலும் இன்று முதல் கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. எனவே இப்பேருந்து இயக்க மாற்று ஏற்பாட்டின்படி பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட மாட்டாது கிளாம்பாக்கம், மாதவரத்திலிருந்து இன்று முதல் அரசு பேருந்துகள் இயங்கும் appeared first on Dinakaran.

Related Stories: