பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

 

கொடைக்கானல், ஜன. 29: கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலாக பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குழந்தை வேலப்பர் கோயில் திருவிழா கொடி ஏற்றத்தில் பங்கு பெற்றார்கள்.

கொடியேற்ற நிகழ்வினை அடுத்து ஒவ்வொரு நாளும் குழந்தை வேலப்பர் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் பிப்.5ம் தேதி தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. ஆசியாவிலேயே மலைப்பிரதேசங்களில் தேர் திருவிழா நடைபெறும் ஒரே இடம் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் ஆகும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், விழா கமிட்டியினரும் செய்து உள்ளனர்.

The post பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: