பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2024தான் கடைசி தேர்தலாக இருக்கும்

 

திருப்பூர், ஜன. 29:பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2024 தான் கடைசி தேர்தலாக இருக்கும் என திருப்பூரில் முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறினார்.பழனி பாபா நினைவு தினத்தை முன்னிட்டு, மனிதநேய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா திருப்பூர் காங்கேயம் ரோட்டில் நடந்தது. திருப்பூர் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமை தாங்கினார். டிப்மா தலைவர் ஜாஹிர் உசேன் வரவேற்று பேசினார். மாநில செயலாளர்கள் ஷபி, ஜாபர் அலி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு பேசினார். இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தனியார் தொலைகாட்சி செய்தியாளர் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. செய்தியாளர் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். நிதிஷ்குமார் கூட்டணியை மாற்றியுள்ளது பச்சை சந்தர்ப்பவாதம். 18 மாதங்களுக்கு முன் பாஜ அரசுக்கு எதிரான பிரசாரம் செய்து கண்டித்தவர், இந்தியா கூட்டணியை ஆரம்பித்தவர்.

தற்போது முதல்வர் பதவிக்கு ஆசைபட்டு, இந்தியா கூட்டணியை விட்டு விலகி பாஜவின் முதல்வராக தொடர்வது கண்டிக்கத்தக்கது. மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024 கடைசி தேர்தலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதில் டிப்மா தலைவர் முகமது அன்சாரி, செயலாளர் சிக்கந்தர், ராயல் குரூப்ஸ் ரமேஷ், சர்தார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2024தான் கடைசி தேர்தலாக இருக்கும் appeared first on Dinakaran.

Related Stories: