ஆஸி. ஓபன் டென்னிஸ் யானிக் சின்னர் சாம்பியன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இத்தாலி வீரர் யானிக் வின்னர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். பரபரப்பான பைனலில் ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவுடன் (27 வயது, 3வது ரேங்க்) நேற்று மோதிய யானிக் சின்னர் (22 வயது, 4வது ரேங்க்) 3-6, 3-6 என்ற கணக்கில் முதல் 2 செட்டையும் இழந்து பின்தங்கினார். இதனால் மெத்வதேவ் எளிதில் வென்று கோப்பையை முத்தமிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

எனினும், உறுதியுடன் போராடிய சின்னர் 6-4, 6-4 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. 5வது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி மெத்வதேவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த சின்னர் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் 3 மணி, 44 நிமிடம் போராடி வென்று தனது முதலாவது கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார். ஆஸி. ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இத்தாலி வீரர் மற்றும் மிக இளம் வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற இத்தாலி வீரர் என்ற பெருமை யானிக் சின்னருக்கு கிடைத்துள்ளது.

The post ஆஸி. ஓபன் டென்னிஸ் யானிக் சின்னர் சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: