ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோர் கண்காட்சியில் முதலீட்டாளர்களுக்கு நினைவுப்பரிசு: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) தென்னிந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான 2 நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட 8,000க்கும் மேற்பட்ட பொருட்கள் 420 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர். மேலும், இரண்டு நாட்கள் நடந்த கண்காட்சியில் குறு, சிறு தொழிலாளர்கள், சுயஉதவி தொழில் செய்பவர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தியதில் நற்பயனைப் பெற்றதாக தெரிவித்தனர். இதன் நிறைவு விழா நேற்று நடந்தது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட தொழில் அதிபர்கள், தொழில்முனைவோர் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன், தொழில்துறை அரசு செயலாளர் அருண் ராய், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா, தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோர் கண்காட்சியில் முதலீட்டாளர்களுக்கு நினைவுப்பரிசு: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: