கொப்பரை கொள்முதலில் ஊழல் ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டு

ஈரோடு: கொப்பரை கொள்முதலில் ஊழல் நடைபெற்று வருவதாக ஒன்றிய அரசின் நாபெட் நிறுவனம் மீது கள் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது. தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளிச்சந்தையில் கொப்பரை தேங்காய் விலை கிலோ ரூ.85 ஆக இருக்கும் நிலையில், அரசு கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 பைசாவுக்கு கொள்முதல் செய்கிறது. இந்த கொள்முதலில் ஊழல், லஞ்சம், முறைகேடு நிறைந்துள்ளது. விவசாயிகள் இதில் பயனாளிகளாக இல்லை. மாறாக அதிகாரிகள், இடைத்தரகர்கள் பயனாளிகளாக உள்ளனர். கொள்முதல் செய்த கொப்பரையை ரூ.65 என்ற விலையில் ஒன்றிய அரசின் நாபெட் நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறது. கொள்முதல் செய்த கொப்பரையை எண்ணெய்யாக மாற்றி வெளிநாடுகளுக்கு விற்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கொப்பரையில் கூடுதல் சல்பர் இருப்பதால் ஏற்றுமதிக்கு உகந்ததாக இல்லை என்று கூறி ஏற்றுமதி செய்ய மறுக்கின்றனர். கொள்முதல் செய்யும் கொப்பரையை கொப்பரையாகவோ அல்லது எண்ணெய்யாகவோ மாற்றி வெளிநாடுகளில் சந்தைப்படுத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும். அவ்வாறு ஏற்றுமதி செய்ய முடியாவிட்டால் கொப்பரை கொள்முதல் திட்டத்தை கைவிடுவது நாட்டிற்கு நல்லதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கொப்பரை கொள்முதலில் ஊழல் ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: