இயற்கை வேளாண்மையில் சாதனை படைத்த அந்தமான் தமிழ் மூதாட்டிக்கு பத்ம விருது

போர்ட் பிளேர்: குடியரசு தினத்தையொட்டி நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதில்,அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவை சேர்ந்த இயற்கை விவசாயி காமாட்சி செல்லம்மாளும்(69)ஒருவர். தமிழரான இவர் தென்னை மற்றும் பனை மரங்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்கும் முறைகளை உருவாக்கியுள்ளார். இவர் தெற்கு அந்தமானில் உள்ள ரங்கசாங்கில் 10 ஏக்கரில் இயற்கை விவசாய பண்ணையை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார். அதில், கிராம்பு, இஞ்சி,அன்னாசி மற்றும் வாழை உள்ளிட்ட ஊடு பயிர்களையும் பயிரிட்டுள்ளார்.இயற்கையான விவசாய முறையை பயன்படுத்தி பயிர் செய்து வருகிறார். தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை அவர் பயன்படுத்துவதில்லை.

இது போன்று இயற்கை விவசாயம் செய்யும்படி மற்ற விவசாயிகளையும் காமாட்சி செல்லம்மாள் ஊக்கப்படுத்தியுள்ளார். அவரது வலியு றுத்தலால், 150க்கும் மேற்பட்டோர் வழக்கமான விவசாய முறைகளை விட்டு விட்டு இயற்கை விவசாயத்துக்கு மாறி உள்ளனர். விவசாயத்தில் புதுமையான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறார். தென்னை சாகுபடியை எளிதாக்கி, குறைவான செலவிலான பயிர் முறைகளை உருவாக்கியுள்ளார்.தென்னை மரங்களுக்கு தீங்கு ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகள் உட்பட விவசாயத்திற்கான ஆக்கப்பூர்வமான, செலவு குறைந்த தீர்வுகளை செயல்படுத்தியுள்ளார். அவருடைய தென்னை தோட்டத்தில் வருடத்துக்கு 27 ஆயிரம் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. 6ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள செல்லம்மாளுக்கு வழங்கப்பட உள்ளது

The post இயற்கை வேளாண்மையில் சாதனை படைத்த அந்தமான் தமிழ் மூதாட்டிக்கு பத்ம விருது appeared first on Dinakaran.

Related Stories: