குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னை: மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் குடியரசுத்தலைவர் நிகழ்ச்சி பனிமூட்டம் காரணமாக தாமதமாக தொடங்கியது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருதுகளை வழங்குகிறார். பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை நகர் முழுவதும் 7500 காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பிற்காக கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் 1,250 ரயில்வே போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த பின்னர் தான் அனுமதிக்கின்றனர்.

The post குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. appeared first on Dinakaran.

Related Stories: