திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் சிறுதானிய உணவு வகைகள் விழிப்புணர்வு

மண்டபம்,ஜன.22: மண்டபம் ஒன்றியம் மானாங்குடி ஊராட்சி மன்றம் சார்பில் ஐயன் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. மண்டபம் ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட மானாங்குடி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பெருங்காடு வளாகத்தில் ஐயன் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி பத்மநாபன் தலைமை வகித்தார். இதில் மானாங்குடி ஊராட்சி செயலாளர் கருணாமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஐயன் திருவள்ளூவர் சிலையை திறந்து வைத்து திருவள்ளூவர் குறித்து சிறைப்புரையாற்றினார்.தொடர்ந்து ஊராட்சி மன்றம் சார்பில் உருவாக்கப்பட்ட பெருங்காடுகள் பகுதியை திறந்து வைத்தார். மானாங்குடி ஊராட்சி பகுதியில் உள்ள சுமார் 13 ஏக்கர் அரசு நிலத்தை பாதுகாத்து பெருங்காடுகள் உருவாக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அங்கு பல்வேறு வகையான மரங்கள் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகிறது.

மேலும் ஊராட்சி பகுதியில் பனை விதைகள் நடவு செய்வதில் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கருப்பட்டி, கொண்டைக்கடலை, முளைக் கொட்டிய தானிய வகைகள், கம்பு, தட்டப்பயிறு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தபடுத்தினார். பின்னர் சிறுதானிய உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புஷ்பம் மேகநாதன் நன்றி தெரிவித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு நாரையூரணி, சின்னுடையார் வலசை, சூரங்காட்டுவலசை, கடுக்காய் வலசை, கீழ கடுக்காய் வலசை மானாங்குடி, கடுக்காய்வலசை ஆகிய கிராமம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் சிறுதானிய உணவு வகைகள் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: