ஆவுடையார்கோவில் பகுதியில் மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

அறந்தாங்கி,ஜன.20: ஆவுடையார்கோவில் பகுதியில் மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அறிவுறுத்தலின் படி ஆவுடையார்கோவில் சரக வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பூவளூர் கிராம நிர்வாக அலுவலர் பொய்யாமொழி, கிராம உதவியாளர் வசந்தகுமார் ஆகியோர் வெள்ளாற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்று உள்ளனர். அப்போது பாண்டிபத்திரம் அருகே அவ்வழியாக 3 மாட்டுவண்டிகளில் மணல் ஏற்றி வந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்துகொண்டு இருந்த போது தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அனுமதி இல்லாமல் வெள்ளாற்று பகுதியில் இருந்து 3 மாட்டுவண்டிகளில் மணல் ஏற்றி வந்தது தெரிவந்துள்ளது. 3 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்து ஆவுடையார்கோவில் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆவுடையார்கோவில் பகுதியில் மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: