அம்பகரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணி

 

காரைக்கால்,ஜன.20: அம்பகரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணி தீவிரமாக நடந்து வந்தது. புதுச்சேரி நலவழித்துறை, காரைக்கால் மாவட்ட சுகாதார இயக்கம், அம்பகரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தீவிர டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணி அம்பகரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வடக்கு வெள்ளாளர் வீதி பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு அம்பகரத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய. மருத்துவர் அரவிந்த் தலைமை வகித்தார்.

சுகாதார ஆய்வாளர் இளையதாசன் சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார், முன்னிலையில் ஆஷா பணியாளர் விஜயா மற்றும் கிராமப்புற செவிலியர் விவேதா பரமேஸ்வரி அப்பகுதியில் உள்ள வீடுகளில் டெங்கு களப்பணி மேற்கொண்டனர். மேலும் வீடுகளில் சுற்றியுள்ள பகுதியில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள், டயர், பானை, உரல்,தேங்காய் குடுவை போன்றவற்றை கண்டறிந்து வீட்டு உரிமையாளர் வைத்து அப்புறப்படுத்தினர்.

தேங்காய் மட்டைகளை நிமிர்த்தி வைக்காமல் நீர் தேங்காமல் கவிழ்த்து அடுக்கி வைக்கவும்,தேவையுள்ள தண்ணீர் பானையை மூடி வைக்கவும், தேவையற்ற பானைகளை கவிழ்த்து வைக்கவும், தேவையற்ற பொருட்களை முறையாக அப்புறப்படுத்தவும் தேவையற்ற டயர்களை தவிர்க்கவும், தேவை எனில் ஓட்டை போட்டு மழை தண்ணீர் தேங்காமல் தடுக்கவும், தண்ணீர் தொட்டியை கொசு புகாமல் மூடி வைக்கவும், அலங்கார பூஞ்சாடிகளில் தண்ணீரை வாரம் ஒரு முறை மாற்றவும் பொது மக்களிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. பொது மக்களுக்கு டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், டெங்கு நோயின் அறிகுறி பற்றியும் எடுத்துரைத்து டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

The post அம்பகரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணி appeared first on Dinakaran.

Related Stories: