நாகப்பட்டினம் மாவட்டத்தில் திடீர் மழை

 

நாகப்பட்டினம்,ஜன.20: நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. தமிழகத்தில் இரண்டு தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை முதல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி, ராமர்மடம், பூவைத்தேடி, காமேஸ்வரம், வைரவன்காடு, மணல்மேடு, திருப்பூண்டி, விழுந்தமாவடி, பறவை உள்ளிட்ட இடங்களில் மழை செய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தற்பொழுது பல்வேறு பகுதிகளில் சம்பா அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில்மழை பெய்தால் சம்பா நெற்கதிர்கள் சாய்ந்து சேதம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் திடீர் மழை appeared first on Dinakaran.

Related Stories: