குஜராத் காங். எம்எல்ஏ திடீர் ராஜினாமா

அகமதாபாத்: குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம் விஜாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான சி.ஜே.சாவ்டா நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.3 முறை பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சாவ்டா சபாநாயகர் சங்கர் சவுத்ரியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.

கடந்த 2022ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 17 பேர் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில், கம்பாட் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சிராக் படேல் ஏற்கனவே பதவியை ராஜினாமா செய்துள்ளார். இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் காங்கிரசின் பலம் 15 ஆக குறைந்து விட்டது.

The post குஜராத் காங். எம்எல்ஏ திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: