ஆறுமுகநேரி கோயில் வருஷாபிஷேகம்

ஆறுமுகநேரி, ஜன. 19: ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. காலையில் கணபதி ஹோமம், கும்ப பூஜை, துர்கா ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து விமான அபிஷேகம், பின்னர் அம்பாளுக்கும், வரசித்தி விநாயகருக்கும் மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சந்தனகாப்பு அலங்காரம், புஷ்பாஞ்சலி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இரவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் உபயதாரர்களான முருகேசன், ஆண்டாள் ராமசாமி, சீனிவாசகன், மேலாத்தூர் ராகவன், பால சாந்தகுமார், ராஜன், துரைப்பாண்டியன், அருண், முத்துக்குமரன், வேல்முருகன், கார்மேகம், பாபு, கோட்டாள பாண்டி, ஆதித்யா பாரத் உட்பட பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் கிழக்கத்தி முத்து, ஆதிசேஷன், பார்வதி குமார், அமிர்தராஜ், மூக்காண்டி, விஜயன், தூசிமுத்து, பாலகணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post ஆறுமுகநேரி கோயில் வருஷாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: