ராணுவ வலிமை அமெரிக்கா முதலிடம் இந்தியா 4வது இடம்

புதுடெல்லி: ராணுவ வலிமைக்கான தரவரிசை பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 4வது இடத்தில் உள்ளது. உலகளாவிய பாதுகாப்புத் தகவல்களைக் கண்காணிக்கும் இணையதளமான குளோபல் பயர்பவர் நிறுவனம், படைகளின் எண்ணிக்கை, ராணுவ தளவாடங்கள், நிதி நிலைத்தன்மை, புவியியல் இருப்பிடம் போன்ற 60க்கும் மேற்பட்ட காரணிகளை கணக்கில் கொண்டு ஆண்டு தோறும் தரவரிசை பட்டியல் வெளியிடுகிறது. 2024ம் ஆண்டிற்கான உலகளாவிய ராணுவ வலிமை தரவரிசை பட்டியலில் 145 நாடுகள் இடம் பெற்றுள்ளன. அதில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 4வது இடத்திலும் உள்ளன.

முதல் 10 நாடுகள் இங்கே: 1.அமெரிக்கா,2. ரஷ்யா 3. சீனா 4. இந்தியா 5. தென் கொரியா 6. இங்கிலாந்து 7. ஜப்பான் 8. துருக்கி 9. பாகிஸ்தான் 10. இத்தாலி

உலகில் மிகக் குறைந்த சக்தி வாய்ந்த ராணுவ வலிமை கொண்ட 10 நாடுகள் பட்டியல்: 1. பூடான் 2. மால்டோவா 3. சுரினாம் 4. சோமாலியா 5. பெனின் 6. லைபீரியா 7. பெலிஸ் 8. சியரா லியோன் 9. மத்திய ஆப்பிரிக்க குடியரசு 10. ஐஸ்லாந்து

The post ராணுவ வலிமை அமெரிக்கா முதலிடம் இந்தியா 4வது இடம் appeared first on Dinakaran.

Related Stories: