நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

களியக்காவிளை ஜன.14: களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது. விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் அமலநாதன் வரவேற்றார். தாளாளர் அருட்தந்தை எக்கர்மன்ஸ் மைக்கேல் முன்னிலை வகித்தார். நிதி காப்பாளர் அருட்தந்தை டோமி லிலில் ராஜா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். விழாவில் துறைவாரியாக மாணவர்கள் பொங்கலிட்டனர். விழாவில் விவசாயத்தை காப்போம் என்ற தலைப்பில் கோலப்போட்டி நடந்தது.

குழித்துறை நகராட்சி
மார்த்தாண்டம்: குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா நடந்தது. குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். ஆணையாளர் ராமத்திலகம் முன்னிலை வகித்தார். இன்ஜினியர் குறல் செல்வி, துணைத்தலைவர் பிரபின் ராஜா, கவுன்சிலர்கள் ரத்தினமணி, செல்வகுமாரி, ஜெயந்தி, விஜயலட்சுமி, லலிதா, ஜூலியட் மெர்லின் ரூத், சாந்தி, ரோஸ்லெட், அருள், ரீகன், விஜு, ஜெலிலா ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி அலுவலகம் முன்பகுதியில் கரும்பு, குத்து விளக்கு வைத்து பொங்கல் வைக்கப்பட்டது.

பீமநகரி ஊராட்சி
ஆரல்வாய்மொழி: பீமநகரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மும்மதத்தை சேர்ந்த பெண்கள் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.அது போன்று வெள்ளமடம் ரேஷன் கடை தெரு பகுதியில் காங்கிரட் தளம் அமைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் சஜிதா சுப்பிரமணியம் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரத்திடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அப்பகுதியில் காங்கிரட் தளம் அமைப்பதற்காக சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான தொடக்க விழாவும் நடைபெற்றது. ஊராட்சி அளவிலான குழுக்கள் கூட்டமைப்பு சார்பில் 100 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் தொழில் தொடங்குவதற்காக மொத்தம் ஒரு கோடி ரூபாய் கடன் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பீமநகரி ஊராட்சி மன்ற தலைவர் சஜிதா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆறுமுகநாதன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினிபகவதியப்பன் , மாநில மீனவரணி துணை செயலாளர் பசிலியான் நசரேத் , அக்சயா கண்ணன்,பீமா நகரி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் சுப்பிரமணியன், பீமநகரி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,வேலப்பன், நாகமணி,சுபா,சத்தியபாலா, சிவாமற்றும் ஏராளமான பெண்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

கீழ்குளம் பேரூராட்சி
கருங்கல்: கீழ்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர். பேரூராட்சி தலைவர் சரளா கோபால் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் கிருஷ்ணன் , லாசர் ,அல்போன்சால் , சுகரா பீபி, ஷோபா, மார்க்கெட் மேரி சுகந்தி, ஜாஸ்மின் , மல்லிகா ,தீபா , சமுத்ரா பாண்டி மற்றும் செயல் அலுவலர் ரகுநாதன், திமுக கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், பேரூர் செயலாளர் எஸ்.எம்.கான், பேரூராட்சி பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ரோகிணி கல்லூரி
அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழர் பாரம்பரிய முறைபடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் முனைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் முனைவர் பிளஸ்ஸி ஜியோ மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். அனைத்து துறை சார்பிலும் பொங்கல் வைக்கப்பட்டது. விழாவில் அனைத்து துறை தலைவர்கள்,பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

The post நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: