கோர்ட் வளாகம் கட்ட 14 ஏக்கர் ஒதுக்கீடு

தென்காசியில் புதிதாக மாவட்ட நீதிமன்றங்கள் துவங்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்துள்ள வக்கீல்கள், வாதிகள், பிரதிவாதிகள் வரவேற்றுள்ளனர். இதுவரை நெல்லைக்கு சென்றுவந்த நிலையில் தற்போது தென்காசியிலேயே வழக்கு நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் போனஸாக மாவட்ட நீதிமன்றம் கட்டுமான பணிகளுக்காக 14 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அறிவிப்பையும் தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாளா விழாவில் தெரிவித்தார். இந்த இடம் தென்காசி மங்கம்மா சாலை பகுதியில் நல்ல மணி கல்லூரிகளுக்கு கீழ்புறம் உள்ள பரும்பு பகுதி ஆகும். இங்கு மொத்தம் அரசு நிலம் 18.5 ஏக்கர் உள்ளது.

முதலில் நீதிமன்றத்திற்கு 10 ஏக்கர் ஒதுக்கிவிட்டு மீதமுள்ள இடத்தில் கலெக்டர் கோட்டாட்சியர், எஸ்.பி. ஆகியோரின் முகாம் அலுவலகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நீதிமன்றத்திற்கு வக்கீல்கள் மொத்த இடத்தையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்போது 14 ஏக்கர் நிலம் நீதிமன்ற வளாகம் கட்டஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . மீதமுள்ள 4.5 ஏக்கர் நிலத்தை ஏற்கனவே திட்டமிட்டபடி கலெக்டர், எஸ்.பி., கோட்டாட்சியர் ஆகியோரின் முகாம் அலுவலகங்கள் அமைக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கோர்ட் வளாகம் கட்ட 14 ஏக்கர் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: