பொங்கல் திருநாள் தகவல்கள்

நன்றி குங்குமம் தோழி

*கர்நாடக மாநிலம் மஞ்சுநாதேஸ்வரர் கோயில் பொங்கல் திருநாளன்று மட்டுமே திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. சிவபெருமான் எழுந்தருளியுள்ள இக்கோவிலில் பெண்கள் செல்ல அனுமதியில்லை.

*கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதர் கோவிலில் மகரசங்கராந்தி அன்று சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. விஸ்வாமித்ர முனிவர் சங்கராந்திஅன்றுதான் காயத்ரி மந்திரம் வழங்கினார்.

*காஞ்சிபுரம் காமாட்சியம்மன் தனி மண்டபத்தில் பொங்கலுக்கு பத்து நாட்கள் முன்பே எழுந்தருள்வார். தனி மண்டபத்தை பொங்கலன்று காய்களால் அலங்கரித்து பாதவடிவில் காணப்படும் பங்காரு காமாட்சிக்கு முழுத்தேங்காயை நைவேத்யம் செய்வார்கள்.

*கும்பகோணம் ராமஸ்வாமி கோயிலில் கனுப் பண்டிகையன்று சீதாதேவி, சக்ரபாணி கோவில் தாயார் விஜயவல்லியுடனும், சாரங்கபாணி கோயில் தாயார் கோமளவல்லியுடனும் சேர்ந்து கனுப்பிடி வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

அயல்நாடுகளில் பொங்கல்

*அமெரிக்காவில் அக்டோபர் மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை அன்று பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

* கொரியாவில் செப்டம்பர் 24ம் தேதி ‘சூசோக்’ என்ற பெயரில் சூரியனை வழிபட்டு பொங்கல் படைக்கிறார்கள்.

* வியட்நாமில் ‘டெட்டிரஸ்து’ எனும் பெயரிலும், ஆப்பிரிக்காவில் அறுவடைக் காலமான செப்டம்பரில் ‘யாம் பெஸ்புல்’ என்ற பெயரிலும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

* சீனாவில் ஆகஸ்ட் 15ம்தேதி ‘அகஸ்ட் மூன்’ என்ற பெயரிலும், இஸ்ரேல் நாட்டில் அக்டோபர் இரண்டாவது ஞாயிறும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

*இலங்கையில் ஜனவரி 14ம் தேதி ‘உழவர் திருநாள்’ என்ற பெயரில் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.

மாட்டுப் பொங்கல் வழிபாடு

* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிராகார நந்தி, அதிகார நந்தி, அஷ்ட நந்தி ஆகிய நந்தி பகவான்களுக்கு மாட்டுப் பொங்கலன்று சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும். சர்க்கரைப் பொங்கல், கரும்பு, பழங்கள், வேர்க்கடலை ஆகியவை நைவேத்யம் செய்யப்படுகின்றன. நந்தி பகவானுக்கு முன்பு அண்ணாமலையார் எழுந்தருளி காட்சி தந்து ஆசி வழங்குவதாக ஐதீகம்.

* திருவாவடுதுறை ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோயில் நந்தி பகவான் ‘படர்ந்த அரச’, உயர்ந்த ரிஷபம் என்று போற்றப்படுகிறார். அம்பிகை இங்கு பசு
வடிவம் தாங்கி ஈசனை வழிபட்டதால் நந்திகேஸ்வரர் சிறப்பு பெற்றுள்ளார். மாட்டுப் பொங்கலன்று இவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நாமும் வழிபட்டு பலன் பெறுவோம்.

சூரிய பகவான்

* பொங்கல் திருநாளன்று சூரிய பகவானுக்கு நன்றி கூறும் வகையில் பூஜைகள் செய்து வணங்குகிறோம். ஜப்பானிலும், சீனாவிலும் சூரியனை பெண் வடிவில் வழிபடுகின்றனர். அவர்களின் மதமான ஷிண்டே, சூரிய வழிபாடு ஒன்றே பாவங்களைப் போக்குகிறது எனவும் சூரியனே உலகின் ஆதாரம் என்றும் போற்றுகிறது.

* ரோமானியர்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டு முதன் முதலில் காலண்டர் உருவாக்கினார்கள்.

* தாய்லாந்து நாட்டினுள்ள சூரியன் கோயில் ‘வாட் அருண்’ என அழைக்கப்படுகிறது.

* எகிப்தில் அபுகும்பெல் என்ற சூரியன் கோயில் நைல் நதிக்கரையில் உள்ளது. இங்கு சூரியோதயத்தின்போது அதன் கிரணங்கள் கோயிலின் உட்புறம் ஒளிர்வது சிறப்பு.

எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.

The post பொங்கல் திருநாள் தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: