உணவுப் பொருட்களில் கலப்படத்தை எப்படி கண்டுபிடிப்பது?

நன்றி குங்குமம் தோழி

சிக்கரி தூள்: காபித் தூளில் சிக்கரி கலந்துள்ளதா என்பதை அறிய ஒரு கண்ணாடி குவளையில் நீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி காபி தூளை சேர்க்கவும். காபி தூள் மிதக்கும்.

தேநீர் தூள்: வடிகட்டும் தாளை எடுத்து அதில் சில தேநீர் இலைகளை பரப்பி வைக்கவும். பின்னர் குழாய் நீரில் வடிகட்டி தாளை கழுவவும். அதில் கறை இருந்தால் கலப்படம் என்பதை அறியலாம். தூய தேநீர் இலைகளாக இருந்தால் வடிகட்டி தாளில் கறை இருக்காது.

காய்கறி: தண்ணீரில் பஞ்சினை நனைத்து அதை பச்சைக் காய்கறிகள் மீதோ அல்லது மிளகாய் மீதோ தேய்க்கவும். பஞ்சு பச்சையாக மாறினால் பச்சை நிற கலப்படம் உள்ளது என்று பொருள்.

மஞ்சள் தூள்: மஞ்சள் பொடியில் செயற்கை வண்ணத்தை கலந்து இருப்பதை அறிய கண்ணாடி குவளையில் நீர் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடியை சேர்த்தால், இயற்கையான மஞ்சள் நிறமாக மாறும். கலப்படமாக இருந்தால் அடர் மஞ்சள் நிறமாக இருக்கும்.

மிளகாய் தூள்: ஒரு கண்ணாடி குவளையில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் மிளகாய் பொடியை தூவவும். மரத்தூள் நீரின் மேற்பரப்பில் மிதக்கும், மிளகாய் பொடி நீரின் அடியில் தங்கும்.

மிளகு: சிறிதளவு மிளகை எடுத்து கண்ணாடி குவளையில் போடவும். தூய மிளகாக இருந்தால் டம்ளரின் அடியில் தேங்கும், கலப்படமாக இருந்தால் (பப்பாளி விதைகள்) நீரில் மிதக்கும்.

பால்: பளபளப்பான சுவற்றின் மேல் ஒரு சொட்டு பாலை தெளிக்கவும். பாலாக இருந்தால் அப்படியே இருக்கும் அல்லது வெண்மை தடம் பதிந்து மெதுவாக கீழே இறங்கும். நீர் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் வெண்மை தடம் பதிக்காமல் உடனே வழிந்துவிடும்.

நெய்: கண்ணாடி கிண்ணத்தில் அரை தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணெயை எடுத்துக்கொள்ளவும். அதில் அயோடினை 2 – 3 சொட்டுகள் சேர்க்கவும். நீலவண்ணம் தோன்றினால் நெய்யில் பிசைந்த உருளைக்கிழங்கு கலந்துள்ளது என்பதை அறியலாம்.

– சுந்தரி காந்தி, சென்னை.

The post உணவுப் பொருட்களில் கலப்படத்தை எப்படி கண்டுபிடிப்பது? appeared first on Dinakaran.

Related Stories: