ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம்

 

பழநி, ஜன. 12: பழநி அருகே ஆயக்குடியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் மற்றும் இந்தி வேளாண் ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. திட்ட அதிகாரி சதீஸ்குமார் தலைமை வகித்தார்.

முகாமில் கோடை உழவின் அவசியம், உயிர் உரங்கள், உயிர் பூஞ்சாணக்கொல்லி விதை நேர்த்தி, உர நிர்வாகம், ஒருங்கிணைந்த களை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மக்காச்சோளத்தில் கூடுதல் விளைச்சல் பெறுவதற்கான வழிமுறைகள், பயிர் பூஸ்டர் தெளிப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

The post ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: