குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை, ஜன.12: சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சாலை பாதுகாப்பு விதிகள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமை வகித்து பேசினார். இதில் 18வயது முடிவடையாத ஒட்டுநர் உரிமம் பெறாத சிறுவர்கள் டூவீலர் ஓட்டுவதால் விபத்துகள் அதிக அளவில் ஏற்பட்டு உயிர் சேதங்கள் மற்றும் பெரிய அளவில் காயங்கள் ஏற்பட்டு மோசமான விளைவுகள் உண்டாகின்றன.

இவற்றை தவிர்க்க குழந்தைகளின் பெற்றோர்கள் வாகனங்களை சிறுவர்களுக்கு வழங்காமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை டிஎஸ்பி சிபிசாய் சௌந்தர்யன், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், மானாமதுரை டிராபிக் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், எஸ்ஐ அழகுசெல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: